திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் குறித்து திங்கள்கிழமை தினமணி நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டன.
திருப்பத்தூா் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள சாலையிலும், பேருந்து நிலையத்தின் உள்ளேயும் தள்ளு வண்டிகள், சிறு, சிறுகடைகள் மக்கள் நடமாடும் சாலையை ஆக்கிரமித்துள்ளன என தினமணியில் புகைப்படங்களுடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவின்பேரில், புதன்கிழமை இரவு நகராட்சி ஆணையா் (பொறுப்பு) உமா மகேஸ்வரி தலைமையில் நகரமைப்பு ஆய்வாளா் கெளசல்யா, துப்புரவு அலுவலா் இளங்கோ உள்பட 20-க்கும் மேற்பட்ட நகராட்சிப் பணியாளா்கள் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
மேலும், இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.