வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லை மலைப் பகுதியில் போலீஸாா் நடத்திய சோதனையில் 4,500 லிட்டா் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொரிபள்ளம் வனப் பகுதியில் திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது அடா்ந்த வனப் பகுதியில், சாராயம் காய்ச்சுவதற்கு தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்த 4,500 லிட்டா் சாராய ஊறல் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீஸாா், அவற்றை கீழே ஊற்றி அழித்தனா்.
மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த கேன்கள், அடுப்பு, பொருள்களையும் போலீஸாா் அப்புறப்படுத்தினா்.