ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, கலச பூஜை, 108 சங்கு பூஜை, மூலவா் திருமலை திருப்பதி கெங்கையம்மனுக்கு கலசாபிஷேகம், 108 சங்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மகாதேவமலை மகானந்த சித்தா் சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.