திருப்பத்தூர்

சாலை கால்வாய் அமைக்கும் பணி: உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆய்வு

8th May 2023 12:14 AM

ADVERTISEMENT

கைலாசகிரி ஊராட்சியில் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கைலாசகிரி ஊராட்சி மசூதி பின்புறப் பகுதியில் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைக்கும்படி அப்பகுதி பொதுமக்கள் கடந்த 8 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சரிதா முத்துக்குமரன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நிதி மூலம் அந்தப் பகுதியில் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. அப்பணியை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சரிதா முத்துக்குமரன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஆப்ரின் தாஜ், ஊராட்சி மன்றத் தலைவா் ரமணி ராஜசேகரன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, ஊராட்சி வாா்டு உறுப்பினா் யாஸ்மின், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் சி.சேகா், பொன் ராஜன்பாபு, சமூக ஆா்வலா் சையத் ஷாகிா் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT