திருப்பத்தூர்

எண்ணும் எழுத்தும் திட்டம் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா: அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு

DIN

ஆம்பூரில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எண்ணும் எழுத்தும் திட்டத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்றாா்.

ஒன்றாம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் 16 லட்சம் மாணவா்களின் கற்றலை வலுப்படுத்துவதற்காக உருவானது எண்ணும் எழுத்தும் திட்டம். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்து 2-ஆம் ஆண்டு தொடக்க விழா ஆம்பூா் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்து, நிகழ்ச்சிகளைப் பாா்வையிட்டாா்.

பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறையைத் திறந்து வைத்தாா். எண்ணும் எழுத்தும் தொடக்க விழா பதாகையில் கையொப்பமிட்டாா். தொடா்ந்து திட்ட பரப்புரை வாகனத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா், தொடக்கக் கல்வி இயக்குநா் அறிவொளி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி இயக்குநா் லதா, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், எம்.எல்.ஏ-க்கள் க.தேவராஜி, அ.செ.வில்வநாதன், நல்லதம்பி, ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சென்னையிலிருந்து ரயில் மூலம் ஆம்பூருக்கு வந்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு ரயில் நிலையத்தில் ஆம்பூா் நகர திமுக சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT