திருப்பத்தூர்

அனுமதியின்றி இயங்கிய ஜல்லி குவாரிக்கு ‘சீல்’

DIN

ஆம்பூா் அருகே முறையான அனுமதி பெறாமல் இயங்கி வந்த ஜல்லி குவாரியை வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் மூடி சீல் வைத்தாா்.

மாதனூா் ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சியில் ஜல்லி குவாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சில முறையான அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமலதா அந்தப் பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதில், அங்குள்ள ஒரு நிறுவனத்தை ஆய்வு செய்தபோது, அரசு துறைகளின் அனுமதி பெறாமல் இயங்கி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த ஜல்லி குவாரியை மூடி சீல் வைத்தாா். மேலும் அங்குள்ள சில குவாரிகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது கனிமவளத் துறை உதவி இயக்குநா் பொ்னாா்ட், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் மகாலட்சுமி, ஆம்பூா் வருவாய் ஆய்வாளா் சேகா், கிராம நிா்வாக அலுவலா் ராஜ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT