திருப்பத்தூர்

திருப்பத்தூரில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

30th Jun 2023 12:10 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகையில் 10,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்து கெண்டனா்.

திருப்பத்தூா் நகரப் பகுதியில் உள்ள கோட்டை ஈத்கா மசூதி, பூரா ஈத்கா மசூதி உள்பட 7 ஈத்கா மைதானங்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்து, ஒருவரை ஒருவா் கட்டித் தழுவி தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.

இதேபோல், ஜோலாா்பேட்டை, பக்கிரி தா்கா, கந்திலி சுற்றுப் பகுதிகளில் உள்ள ஈத்கா மைதானங்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT