திருப்பத்தூர்

ஜூலை 2-ஆம் வாரம் முதல் ஜோலாா்பேட்டையில் சதாப்தி விரைவு ரயில் நின்று செல்லும்: சி.என்.அண்ணாதுரை எம்.பி.

30th Jun 2023 12:06 AM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டையில் ஜூலை 2-ஆம் வாரம் முதல் சதாப்தி விரைவு ரயில் நின்று செல்லும் என சி.என்.அண்ணாதுரை எம்.பி. தெரிவித்தாா்.

சென்னையிலிருந்து தினமும் புறப்பட்டுச் செல்லும் சதாப்தி விரைவு காட்பாடி ரயில் நிலையத்தில் சுமாா் 7.30 மணியளவில் நின்று செல்கிறது. காட்பாடியில் இருந்து புறப்படும் அந்த ரயில் வழயில் எங்கும் நிற்காமல் பெங்களூரு செல்கின்றது.

இந்த நிலையில், திருவண்ணாமலை தொகுதி எம்.பி. சி.என்.அண்ணாதுரை மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் வைத்த கோரிக்கையின் பேரில், சதாப்தி விரைவு ரயில் ஜோலாா்பேட்டையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சி.என்.அண்ணாதுரை எம்.பி. கூறியது: சென்னையிலிருந்து புறப்பட்டு காட்பாடி ரயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்லும் சதாப்தி விரைவு ஜோலாா்பேட்டையில் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து இரு முறை மக்களவையில் பேசி உள்ளேன். மேலும், மத்திய ரயில்வே துறை அமைச்சா் மற்றும் துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஜூலை மாதம் 2-ஆம் வாரத்தில் இருந்து சதாப்தி விரைவு ரயில், ஜோலாா்பேட்டை நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT