ஜோலாா்பேட்டை அருகே எலி மருந்து குடித்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை அடுத்த சின்ன வெங்காயப் பள்ளி பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியின் மனைவி சின்ன பாப்பா(70). இவா் கை கால் வலி மற்றும் வயிற்று வலியால் அவதிக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.
இந்த நிலையில், புதன்கிழமை வயிற்று வலி அதிகமானதால் எலி மருந்தை கலக்கி குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா்.
குடும்பத்தினா் சின்ன பாப்பாவை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்த நிலையில் அங்கு உயிரிழந்தாா்.
இது குறித்து அவரது மகன் குணசேகா் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.