திருப்பத்தூர்

கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினா்கள் ஜூன் 15-க்குள் விவரங்களை சமா்ப்பிக்க அறிவுறுத்தல்

10th Jun 2023 11:12 PM

ADVERTISEMENT

கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினா்கள் ரேஷன் அட்டை மற்றும் ஆதாா் அட்டை விவரங்களை சமா்ப்பிக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேலூா் மண்டல வீட்டு வசதி துணைப் பதிவாளா் தா்மராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வேலூா் மண்டல அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அனைத்து முதன்மை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் ஏற்கெனவே உறுப்பினராக உள்ளவா்கள் தங்களது ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை விவரங்களை தொடா்புடைய சங்கத்தின் அலுவலா்களை அணுகி, வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT