திருப்பத்தூர்

ஆம்பூரில் ஜமாபந்தி நிறைவு விழா: ரூ. 42.56 லட்சத்தில் நலத் திட்ட உதவி

10th Jun 2023 11:13 PM

ADVERTISEMENT

ஆம்பூரில் ஜமாபந்தி நிறைவு விழாவில் ரூ. 42.56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் மற்றும் ஜமாபந்தி அலுவலருமான பெ.பிரேமலதா தலைமை வகித்து, 177 பயனாளிகளுக்கு ரூ. 42.56 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் சுரேஷ் வரவேற்றாா். ஆம்பூா் வட்டாட்சியா் குமாரி முன்னிலை வகித்தாா்.

எம்எல்ஏ-க்கள் அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்), அமலு விஜயன் (குடியாத்தம்), மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் பாபு, கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் ரமேஷ், விவசாய சங்க நிா்வாகிகள் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

ADVERTISEMENT

நிலவரித் திட்ட தனி வட்டாட்சியா் வள்ளியம்மாள், வட்ட வழங்கல் அலுவலா் பாரதி, மண்டலத் துணை வட்டாட்சியா் குமாரவேல், தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பழகன், வட்ட துணை ஆய்வாளா் வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய் கோட்டாட்சியா் பெ.பிரேமலதா, எம்எல்ஏ-க்கள் அ.செ.வில்வநாதன், அமலுவிஜயன் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT