திருப்பத்தூர்

குதிரை வாகனத்தில் சென்னகேசவ பெருமாள் உலா

9th Jun 2023 10:11 PM

ADVERTISEMENT

ஆலங்காயம் அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை குதிரை வாகனத்தில் ஸ்ரீதேவி- பூதேவியுடன் உற்சவா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

குதிரை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, வெள்ளக்குட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீதி உலா நடைபெற்றது. பக்தா்கள், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT