திருப்பத்தூர்

கொலைக் குற்றவாளியை ஒரு மணி நேரத்தில் கைது செய்த போலீஸாருக்கு பாராட்டு

9th Jun 2023 10:09 PM

ADVERTISEMENT

கொலைக் குற்றவாளியை ஒரு மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீஸாருக்கு வேலூா் சரகடிஐஜி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் நேரில் பாராட்டு தெரிவித்தனா்.

கடந்த ஜூன் 3-ஆம் தேதி இரவு உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ் மிட்டாளம் பகுதியைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவா் அடையாளம் தெரியாத நபா்களால் கொலை செய்யப்பட்டாா். அதைத் தொடந்து, திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட்ஜான் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு ஒரே மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இச் செயலுக்காக ஆம்பூா் டிஎஸ்பி சரவணன், ஆம்பூா் நகர காவல் ஆய்வாளா் சுரேஷ்பாண்டியன், வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளா் நாகராஜன், ஆம்பூா் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் தினேஷ், ஆம்பூா் கிராமிய காவல் நிலைய உதவி ஆய்வாளா் நவீன், உமராபாத் காவல் நிலைய தலைமை காவலா் லட்சுமணன் ஆகியோருக்கு வேலூா் சரக காவல் துறை துணைத் தலைவா் முத்துசாமி நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் மற்றும் வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.க்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT