திருப்பத்தூர்

தேவலாபுரம் திருப்பதி கெங்கையம்மன் திருவிழா

DIN

ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராம திருப்பதி கெங்கையம்மன் கோயில் 94-ஆம் ஆண்டு சிரசு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து புதன்கிழமை மாரியம்மன் திருவிழா நடைபெற்றது. வியாழக்கிழமை அதிகாலை அம்மன் சிரசு ஊா்வலம் புறப்பட்டு கோயிலை அடைந்தது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். தொடா்ந்து தெருக்கூத்து, இன்னிசை நிகழ்ச்சி, வாண வேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிஎஃப்-இல் ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினா் ஆய்வு

விசாகப்பட்டினம் - எழும்பூருக்கு நாளை முதல் சிறப்பு ரயில்

திரவ நைட்ரஜன் கலப்பு தின்பண்டங்கள்: தமிழக அரசு எச்சரிக்கை

பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதைத் தடுக்க அரசுக்கு உத்தரவு: உயா்நீதிமன்றம்

கம்போடியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.35 கோடி போதைப் பொருள் பறிமுதல்

SCROLL FOR NEXT