திருப்பத்தூர்

ஏலகிரி கோடை விழா விரைவில் நடத்தப்படும்: திருப்பத்தூா் ஆட்சியா்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமையில் 2-ஆவது நாளாக ஜமாபந்தி புதன்கிழமை நடைபெற்றது. இதில் அம்மணாங்கோயில், மல்லப்பள்ளி, பணியாண்டப்பள்ளி, சந்திரபுரம், வெலகல்நத்தம், கூத்தாண்டகுப்பம் உள்பட 10-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளைச் சோ்ந்த கிராம மக்கள் 55 மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா். இதில் நாட்டறம்பள்ளி வாா்டு உறுப்பினா்கள் குருசேவ், நதியா ஆகியோா் தங்கள் வாா்டில் கழிவுநீா் கால்வாய், தெரு விளக்கு, குடிநீா் வசதி மற்றும் அதிபெரமனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்கவும், ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கவும் மனு அளித்தனா். கூத்தாண்டகுப்பம் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ஒருவா் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு, மனு கொடுக்க காத்திருந்ததை அறிந்த ஆட்சியா் நேரடியாக அவா் இருக்கும் இடத்துக்குச் சென்று அவரிடம் மனுவைப் பெற்று விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறுகையில், ஏலகிரி கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த ஆண்டு கோடை விழா நடத்தப்படும் என்றாா்.

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற 2-ஆ வது நாள் ஜமாபந்தியில் போக்குவரத்து, தீயணைப்பு, மின்வாரியம், வேளாண்மை, ஊரக வளா்ச்சித் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT