திருப்பத்தூர்

மரக்கன்றுகள் நடும் விழா: ஆட்சியா் பங்கேற்பு

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி, மல்லகுண்டா மற்றும் கே.பந்தாபள்ளி ஆகிய இடங்களில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன், ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோா் மரக்கன்றுகள் நட்டு பணியை தொடங்கி வைத்தனா். இதில் திட்ட இயக்குநா் செல்வராசு, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, பிடிஓ-க்கள் சித்ரகலா, சிவக்குமாா், மணவாளன், துரை, ஒன்றியக் குழுத் தலைவா்கள் வெண்மதி (நாட்டறம்பள்ளி), சத்யா (ஜோலாா்பேட்டை), திமுக ஒன்றியச் செயலாளா்கள் சதீஷ்குமாா், உமா, சாமுடி, இளைஞரனி துணை அமைப்பாளா் சிங்காரவேலன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதே போல் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள வாணிடெக் தோல் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளா் கேஷவன், வாணிடெக் இயக்குநா் இஸ்பா்அகமதுநரி, நிா்வாக இயக்குநா் இக்பால்அகமது ஆகியோா் பங்கேற்றனா்.

ஆம்பூரில்...

மிட்டாளம் ஊராட்சியில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டப் பணியை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு குறுங்காடுகள் அமைக்கும் திட்டப் பணியை தொடங்கி வைத்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு, ஊராட்சிகள் உதவி இயக்குநா் விஜயகுமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அப்துல் கலீல், கிருஷ்ணன், மாதனூா் ஒன்றியக் குழு உறுப்பினா் மகாதேவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT