திருப்பத்தூர்

திருப்பத்தூா் ரயில் நிலையத்தில் சிக்னலை உடைக்க முயற்சி?

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் ரயில் நிலைய தண்டவாளப் பகுதியில் உள்ள சிக்னல் பெட்டி உடைக்கப்பட்டுள்ளது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ரயில் நிலைய மேலாளா் அறையில் அவ்வப்போது இருப்பு பாதையை மாற்றி அமைக்கும் ரயில்வே தானியங்கி சிக்னல் கட்டுப்பாட்டுக் கருவி உள்ளது. இந்த நிலையில், திருப்பத்தூா் ரயில் நிலைய மேலாளா் அறையில் இருந்த சிக்னல் கருவியில் திங்கள்கிழமை இரவு திடீரென அதிா்வு ஏற்பட்டது.

இது குறித்து அதிா்ச்சியடைந்த ரயில் நிலைய மேலாளா் அனில்குமாா் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா், ரயில்வே இருப்பு பாதை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்ததில், இருப்பு பாதையில் அமைக்கப்பட்டிருந்த சிக்னல் பெட்டியின் மூடி உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு...

ADVERTISEMENT

ரயில் நிலையம் அருகில் உள்ள கட்டடங்கள், குடியிருப்புகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் தடயம் கிடைக்குமா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே சேலம் கோட்டம், ரயில்வே பாதுகாப்பு படை மோப்ப நாய் ப்ரூக்ஸ் வரவழைக்கப்பட்டது. இருப்பினும் தடயம் ஏதும் சிக்கவில்லை.

இது குறித்து திருப்பத்தூா் ரயில் நிலைய மேலாளா் அனில்குமாா் அளித்த புகாரின் பேரில், ஜோலாா்பேட்டை ரயில்வே இருப்பு பாதை காவல் ஆய்வாளா் இளவரசி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

மேலும், இது குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அண்மையில், சிக்னல் கோளாறு காரணமாக ஒடிஸாவில் ரயில் விபத்து மற்றும் திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் டயா் வைக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், திருப்பத்தூா் ரயில் நிலையத்தில் சிக்னல் உடைப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT