திருப்பத்தூர்

திருப்பத்தூா்: நியாயவிலைக் கடைகளில் திருப்பத்தூா் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூரில் உள்ள நியாயவிலைக் கடைகளில் திருப்பத்தூா் நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் நகராட்சிக்கு உட்பட்ட 36 வாா்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் சிலவற்றில் போதுமான குடிமைப் பொருள்கள் இருப்பு இருப்பதில்லை எனவும், சில கடைகள் அவ்வப்போது மட்டும் திறக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து வந்த தகவலின்பேரில், வாா்டு எண் 2-இல் உள்ள கற்பகம் கூட்டுறவு நியாய விலைக் கடையில், நகா்ப்புற மக்களுக்கு சரியான முறையில் குடிமைப் பொருள்கள் சென்றடைகிா என நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், சில கடைகளில் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT