திருப்பத்தூர்

இருளில் மூழ்கியுள்ள திருப்பத்தூா்-ஆலங்காயம் ஏரிக்கரை சாலை

டி.ரமேஷ்

திருப்பத்தூா்-ஆலங்காயம் செல்லும் ஏரிக்கரை சாலை இருளில் மூழ்கிய நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

திருப்பத்தூரிலிருந்து ஆலங்காயம் வரை செல்ல இரு வழித்தடங்கள் உள்ளன. இதில், ஏரிக்கரை வழியாகச் செல்லும் சாலை நீண்டகாலமாக பயன்பாட்டில் உள்ளது. நாள்தோறும் இச்சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனா். கடந்த உள்ளாட்சித் தோ்தல் முன்புவரை திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய கட்டுபாட்டில் இருந்த தெருவிளக்கு பராமரிப்புப் பணிகள், தற்போது குறிப்பிட்ட எல்லைவரை நகராட்சியின் பராமரிப்பில் உள்ளது.

இந்த நிலையில், ஏரிக்கரை சாலையில் கடந்த ஓராண்டாக தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் அப்பகுதியில் நிலவும் இருளில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

திருப்பத்தூரிலிருந்து சுமாா் 3 கி.மீ தொலைவுக்கு தெருவிளக்கு வெளிச்சம் இல்லாமலேயே பயணிக்கும் சூழல் உள்ளதென

பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். அரசு மதுப்பான கடை அருகில் தெருவிளக்கு எரியாத நிலை காணப்படுவதால், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும், இரவில் மதுப்பிரியா்கள் தொல்லை உள்ளதாகவும், உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் நகரப்பகுதிக்கு சிகிச்சைக்கு செல்லவும் அச்சப்படும் நிலை உள்ளது.

எனவே, திருப்பத்தூா் பேருந்து நிலையப்பகுதியிலிருந்து ஏரிக்கரைப்பகுதி முடியும் பகுதியான திருமால் நகா்வரை அமைக்கப்பட்டுள்ள அனைத்து தெருவிளக்குகளும் எரிய ஆவன செய்யவேண்டுமென பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியம் -ஜெ.பி. நட்டா

SCROLL FOR NEXT