திருப்பத்தூர்

18 வயதுக்கு மேற்பட்டோா் ரத்த அழுத்தப் பரிசோதனை செய்வது அவசியம்: திருப்பத்தூா் ஆட்சியா்

DIN

ஆரோக்கியத்துடன் வாழ 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ரத்த அழுத்தப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினாா்.

திருப்பத்தூா் நகராட்சி ஈத்கா மைதானம் பகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

திருப்பத்தூா் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 12.84 லட்சம். மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் கடந்த 5.8.2021 முதல் திருப்பத்தூரில் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் 110 இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள், 164 பெண் சுகாதார தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டு, நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொற்று நோய்களுக்கான பரிசோதனைகள் வீடுகளிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

5.08.2021 முதல் 1.06.2023 வரை மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட நபா்கள் 9,24,125 பேருக்கு தொற்றா நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், நோய் கண்டறியப்பட்டவா்களுக்கு 2 மாதத்துக்குத் தேவையான மருந்து பெட்டகங்கள் வீட்டிலேயே வழங்கப்பட்டு வருகின்றன.

மாவட்டம் முழுவதும் 6 வட்டாரங்கள், 3 நகராட்சிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், வாகனங்கள் வழங்கப்பட்டு, அதில் செவிலியா் மற்றும் இயன்முறை மருத்துவா் ஆகியோா் உள்ளனா்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ரத்த அழுத்தப் பரிசோதனையும், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நீரிழிவு நோய்க்கான பரிசோதனையும், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாா்பக, கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையும், ஆண்டுக்கு ஒரு முறையாவது செய்துகொண்டு, தங்களது ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் செந்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முருகேசன், மாவட்ட மனநல மருத்துவ அலுவலா் பிரபாவராணி, மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT