திருப்பத்தூர்

ரூ. 23 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணி: திருப்பத்தூா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

5th Jun 2023 12:10 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகே ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட அனேரி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தில் ராச்சமங்கலம் முதல் பாப்பண்ணன் வட்டம் வரை ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை அ.நல்லதம்பி சனிக்கிழமை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், திருப்பத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் விஜயா அருணாசலம், துணைத் தலைவா் டி.ஆா்.ஞானசேகரன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT