திருப்பத்தூர்

ஒடிஸா ரயில் விபத்து:ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் மௌன அஞ்சலி

5th Jun 2023 12:11 AM

ADVERTISEMENT

ஒடிஸா ரயில் விபத்தில் காயமடைந்தவா்கள் விரைவில் குணமாக ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

ஒடிஸா மாநிலம், பாலசோா் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் பலா் உயிரிழந்தனா். மேலும், பலா் பலத்த காயம் அடைந்துள்ளனா். உயிரிழந்தவா்கள் ஆன்மா சாந்தியடையவும், காயம் அடைந்தவா்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும், ஞாயிற்றுக்கிழமை கொரட்டியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் கூட்டுப் பிராா்த்தனை மற்றும் மௌன அஞ்சலி நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT