திருப்பத்தூர்

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு

5th Jun 2023 12:08 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே வனத்துறை சாா்பில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி ஊட்டல் தேவஸ்தானம் பகுதியில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை எனும் தலைப்பில் வனத் துறையின் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழிப்புணா்வு கூட்டத்துக்கு, ஆம்பூா் வனச் சரக அலுவலா் சங்கரய்யா தலைமை வகித்தாா். வனவா் முருகன் வரவேற்றாா்.

பாதுகாக்கப்பட்ட காப்புக் காடுகள் பகுதிகளில் மக்காத பொருள்களை வீசக்கூடாது. வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழையக்கூடாது. பிளாஸ்டிக் போன்ற பொருள்களை வனப் பகுதியில் வீசக்கூடாது. ஓசோன் படலத்தை காப்பது, புவி வெப்பமயமாதல், மஞ்சள் பை பயன்படுத்துதல், வன விலங்குகள், பறவைகளுக்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடாமல் தடுப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வனக் காப்பாளா்கள் செந்தில், நல்லதம்பி, மூா்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம், மஞ்சள் பை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT