திருப்பத்தூர்

சாராயம் காய்ச்சுவோா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்படுவா்: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

3rd Jun 2023 11:44 PM

ADVERTISEMENT

சாராயம் காய்ச்சும் நபா்கள் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்படுவா் என திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் எச்சரிக்கை விடுத்தாா்.

திருப்பத்தூா் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூா்நாடு மலை பகுதியில் உள்ள சேம்பரை கிராமத்தில் மதுவிலக்கு சோதனை மற்றும் கிராம விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பொதுமக்களிடையே பேசியது:

கிராமத்துக்கு வரும் அந்நியா்கள், சந்தேகப்படும்படியான நபா்கள் குறித்தும், கிராமத்தில் நடைபெறும் குற்றச் செயல்கள் குறித்தும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சட்ட விரோத செயல்களான சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்கும் தொழிலில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவா் என்றாா்.

ADVERTISEMENT

காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில், காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT