திருப்பத்தூர்

மாந்தோப்பில் பதுங்கிய 12 அடி நீள மலைப் பாம்பு மீட்பு

3rd Jun 2023 11:46 PM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி அருகே மாந்தோப்பில் பதுங்கியிருந்த 12 அடி நீள மலைப் பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பையனப்பள்ளி கிராமத்தில் விவசாயி ஒருவருக்குச் சொந்தமான மாந்தோப்பில் வெள்ளிக்கிழமை காலை மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. இதைப்பாா்த்த அப்பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலா் ரமேஷ் (பொறுப்பு) தலைமையில் வீரா்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் மாந்தோப்பில் பதுங்கியிருந்த 12 அடி நீள மலைப் பாம்பை லாவகமாகப் பிடித்து அருகே உள்ள காட்டுப் பகுதியில் விட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT