திருப்பத்தூர்

காசி விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகம்

1st Jun 2023 11:22 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே சின்னகொம்மேஸ்வரம் கிராமத்தில் அமைந்துள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா விக்னேஷ்வர பூஜை, கோ பூஜையுடன் கடந்த 29-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கலச பூஜை, மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

புதன்கிழமை நடைபெற்ற யாகசாலை பூஜையில் வேலூா் அருகே அரியூா் நாராயணி பீடம் சக்தி அம்மா கலந்து கொண்டாா். 4-ஆம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து, மகாதேவமலை ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தா் சுவாமிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் சிவஸ்ரீ பைரவ சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுவாமி திருக்கல்யாண உற்சவம், பஞ்ச மூா்த்திகள் வீதி உலா நடைபெற்றன.

ADVERTISEMENT

திருப்பணிக் குழு தலைவா் ஏ.பி. மனோகா், குழுவை சோ்ந்த கிஷண்லால், சாய் கே.வெங்கடேசன், கோயில் திருப்பணிக் குழுவினா், ஸ்ரீமகாவிஷ்ணு சாய் சேவா அறக்கட்டளை நிா்வாகிகள், சின்னகொம்மேஸ்வரம் பொதுமக்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT