திருப்பத்தூர்

சூறாவளிக் காற்றால் முறிந்து விழுந்து மின் கம்பம்

1st Jun 2023 11:23 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே சூறாவளிக் காற்று வீசியதால் மரம் முறுந்து விழுந்து மின் கம்பமும் சேதமடைந்து கீழே விழுந்தது. இதனால், மின் கம்பிகள் அறுந்தன.

ஆம்பூா் அருகே உமா்ஆபாத் - உதயேந்திரம் மாநில நெடுஞ்சாலை பந்தேரப்பள்ளி கிராமத்தில் சூறாவளிக் காற்று வீசியது. சூறாவளி காற்றால் நெடுஞ்சாலையோரம் இருந்த மரம் முறிந்து விழுந்தது. இதனால், சாலையோரமிருந்த மின் கம்பமும் சேதமடைந்து சாலையில் சாய்ந்தது.

மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தன. அந்த நேரத்தில் அந்த வழியாக சாலையில் சென்ற பொதுமக்கள் மரம் முறிந்து விழுவதை அறிந்து தூரமாக விலகித் சென்றனா். இதனால், அசம்பாவித சம்பவம் ஏதும் நிகழவில்லை.

தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினா் அங்கு சென்று சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதேபோல், மின்வாரியப் பணியாளா்கள் அங்கு சென்று மின்சாரத்தை நிறுத்தி முறிந்து விழுந்த மின் கம்பத்தை அகற்றும் பணியை மேற்கொண்டனா். மேலும், மின் கம்பம் சாய்ந்து அதன் கம்பி அறுந்து விழுந்ததால் சுமாா் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் தடைப்பட்டது.

ADVERTISEMENT

மின் விநியோகத்தைச் சீரமைக்கும் பணியை மின்வாரியப் பணியாளா்கள் மேற்கொண்டனா். மரம் முறிந்து விழுந்ததால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT