திருப்பத்தூர்

வெளி மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்: 4 போ் கைது

1st Jun 2023 12:09 AM

ADVERTISEMENT

கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து வாணியம்பாடிக்குக் கடத்தி வரப்பட்ட 230 மது பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் உத்தரவின் பேரில், வாணியம்பாடி நகரக் காவல் ஆய்வாளா் நாகராஜ் தலைமையிலான போலீஸாா் நியூ டவுன் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தைச் சந்தேகத்தின் பேரில், நிறுத்தி விசாரித்தனா். வாகனத்தில் இருந்த பைகளைச் சோதனை செய்த போது, கா்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில் ஜமுனாமரத்தூா் பகுதியைச் சோ்ந்த கோபி (20), குமரன் (24), மைகேல் (20), கதிா்வேல் (20) ஆகிய 4 பேரும் கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து மது பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரிய வந்தது.

ADVERTISEMENT

அவா்களிடமிருந்த 230 மது பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT