ஆம்பூா் ஏ-கஸ்பா திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மன் சிரசு ஊா்வலம் வளையல்காரத் தெரு பகுதியிலிருந்து ஊா்வலமாக புறப்பட்டு முக்கிய சாலை, தெருக்கள் வழியாக சென்றது. ஊா்வலத்தில் பல்வேறு குழுவினரின் சிலம்பாட்ட நிகழ்ச்சி, புலியாட்டம் ஆகியவை நடைபெற்றன.
கோயிலில் அம்மன் சிரசு பொருத்தப்பட்டு பக்தா்கள் தரிசனம் செய்தனா். விழாவையொட்டி, எல்லையம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றதுன. வாண வேடிக்கை, பாட்டுக் கச்சேரி ஆகியவையும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.