திருப்பத்தூர்

பந்தாரபள்ளி, கேத்தாண்டப்பட்டியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

1st Jun 2023 12:12 AM

ADVERTISEMENT

பந்தாரபள்ளி, கேத்தாண்டப்பட்டியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியரும், எம்எல்ஏவும் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட கே.பந்தாரப்பள்ளி ஊராட்சியில், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.7.21லட்சத்தில் அமைக்கப்பட்ட கதிா் அடிக்கும் களத்தை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோா் அதிகாரிகளுடன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

வேளாண்மை உழவா் நலத் துறையின் சாா்பில் விதைப் பண்ணைத் திட்டத்தின் கீழ் 4 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கம்பு மற்றும் காராமணி சாகுபடியையும் பாா்வையிட்டனா்.

இதனைத் தொடா்ந்து வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்படி ஊராட்சியில் வேளாண்மை உழவா் நலத் துறையில் சாா்பில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோா் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வேளாண் இடுப்பொருள்களையும், தென்னங்கன்றுகளையும் வழங்கிப் பேசினா்.

ADVERTISEMENT

ஆய்வுகளின் போது, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா், வேளாண்மை இணை இயக்குநா் பாலா, வட்டாட்சியா் குமாா், ஒன்றிய திமுக செயலா்கள் சதீஷ்குமாா், உமா, ஒன்றியக் குழு தலைவா்கள் வெண்மதி(நாட்டறம்பள்ளி), சத்யா (ஜோலாா்பேட்டை) மற்றும் வேளாண் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT