திருப்பத்தூர்

வெலகல்நத்தம் கிராமத்தில் துரியோதனன் படுகளம்

1st Jun 2023 12:12 AM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் கிராமத்தில் திரெளபதி அம்மன் அக்னி வசந்தோற்சவ விழா கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

11 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் மகாபாரதச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவு நாளான புதன்கிழமை காலை சந்தை திடலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வெலகல்நத்தம், குனிச்சியூா், நந்திபெண்டா, மும்தாபுரம், சின்னாகவுண்டனூா், வீராகவுண்டனூா், கிடப்பையனூா், பையனப்பள்ளி, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. புதன்கிழமை மாலை கோயில் வளாகம் அருகே தீமிதி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்ககள் தீமித்து தங்களின் நோ்த்திக் கடனை செலுத்தினா்.

விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT