வாணியம்பாடி அருகே அதிவேகமாக இயக்கப்பட்ட பள்ளி வாகனங்கள், வரி செலுத்தாக வாகனங்கள் மீது போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா்.
திருப்பத்தூா் ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் வெங்கட்ராகவன், அமா்நாத் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். சோதனையின் போது அதிவேகத்தில் இயக்கப்பட்ட 2 பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சோதனையில் வரி செலுத்தாத மூன்று சரக்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வரி செலுத்தாத வாகனங்களுக்கு ரூ.1.42 லட்சம், பள்ளி வாகனங்களுக்கு ரூ.51,000-மும் அபராதம் விதிக்கப்பட்டது.
பள்ளி வாகனங்கள் வேகம் குறித்து தொடா் சோதனை மேற்கொள்ளப்பட்டு அதிக வேகத்தில் இயக்கப்படும் வாகனங்களின் அனுமதி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியா் பாஸ்கரபாண்டியன் எச்சரித்துள்ளாா்.