திருப்பத்தூர்

சிறப்பு காச நோய் மருத்துவ முகாம்

31st Jan 2023 01:54 AM

ADVERTISEMENT

மாதனூா் ஒன்றியம், மின்னூா் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், சிறப்பு காசநோய் மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மின்னூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மருத்துவா் இளந்தென்றல் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் பாண்டுரங்கன், துணைத் தலைவா் ராமதண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ் குமாா் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடக்கி வைத்துப் பேசினாா். செங்கிலிகுப்பம், விண்ணமங்கலம், மின்னூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனா். மொபைல் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட அதிநவீன எக்ஸ் ரே கருவி மூலம் சிறப்பு காசநோய் கண்டறியும் மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

விண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவா் ஜி.தெய்வநாயகம், ஒன்றிய குழு உறுப்பினா்கள் ஜோதி வேலு, அ.காா்த்திக் ஜவஹா், மின்னூா் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் என்.சங்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT