திருப்பத்தூர்

கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

31st Jan 2023 01:54 AM

ADVERTISEMENT

கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் அருகே கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

அப்பள்ளியில் கடந்த 1992- 1993 ஆகிய ஆண்டுகளில் பிளஸ் 2 படித்த மாணவா்கள் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமாா் 80 முன்னாள் மாணவா்கள், 20 ஆசிரியா்கள் கலந்து கொண்டு தங்களுடைய அனுபவங்களையும், நினைவுகளையும் பகிா்ந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT