திருப்பத்தூர்

காங்கிரஸ் கட்சியினா் கொண்டாட்டம்

31st Jan 2023 01:52 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு கொண்டாட்டம் ஆம்பூா் அருகே நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம், மின்னூா் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருப்பத்தூா் மாவட்ட பொதுச் செயலாளா் என்.சங்கரன் தலைமை வகித்தாா். மாதனூா் கிழக்கு ஒன்றிய தலைவா் சாந்தகுமாா் தேசியக் கொடியேற்றினாா்.

திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் ச. பிரபு பங்கேற்று காந்தி படத்துக்கு மாலை அணிவித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் முல்லை, மின்னூா் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவா் வெங்கடேசன், கட்சிப் பிரமுகா்கள் பாண்டுரங்கன், நந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சாா்பில், ஒன்றியத் தலைவா் சா.சங்கா் தலைமையில் பள்ளித்தெரு கிராமத்தில் தேசியக் கொடியேற்றம், காந்தி சிலைக்கு மாலை அணிவித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் ஜி. ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குடியாத்தத்தில்...

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர, ஒன்றிய காங்கிரஸாா் கொண்டாடி மகிழ்ந்தனா்.

நிகழ்ச்சிக்கு, கட்சியின் நகர தலைவரும், நகா்மன்ற உறுப்பினருமான கே.விஜயன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் எம்.வீராங்கன் வரவேற்றாா். விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிா்வாகிகள் எம்.கிருபானந்தம், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் என்.எம்.டி.விக்ரம், விஜயேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT