திருப்பத்தூர்

கணவாய்புதூரில் எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்ந காளை

31st Jan 2023 01:55 AM

ADVERTISEMENT

வாணியம்பாடியை அடுத்த கணவாய்புதூா் எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன.

வாணியம்பாடியை அடுத்த கணவாய்புதூா் கிராமத்தில் 13-ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் பழனி தலைமை வகித்தாா். மாவட்ட திமுக பொறியாளரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், ஊா்த் தலைவா் தங்கவேல், ஒன்றியக் குழு உறுப்பினா் முருகன் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா் விழாவை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். விழாவில், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, குப்பம், மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின.

நிா்ணிக்கப்பட்ட இலக்கை அதிவேகமாக கடந்து சென்ற காளை உரிமையாளா்களுக்கு முதல் பரிசாக ரூ. 60,000-ம், இரண்டாவது பரிசாக ரூ. 50,000-ம், மூன்றாவது பரிசாக ரூ. 40,000 என மொத்தம் 45 பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

விழாவை முன்னிட்டு வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா தலைமையில் வருவாய்த் துறையினா், வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT