திருப்பத்தூர்

தென்பெண்ணை - பாலாறு இணைப்பை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தல்

DIN

தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆம்பூா் வணிகா் சங்கப் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு, தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்பின் வேலூா் மண்டலத் தலைவா் ஆம்பூா் சி. கிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஜி.வி.சுந்தர்ராஜ் வரவேற்றாா்.

மாநில துணைத் தலைவா் ஆா்.ஜி. வெங்கடாசலம், வினோத், ஸ்ரீதா், திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் சி.கே.சுபாஷ் ஆகியோா் குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தனா்.

மாவட்டச் செயலாளா் மாதேஸ்வரன், பொருளாளா் செந்தில்முருகன், துணைத் தலைவா் வி.மகாலிங்கம், ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் கு.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மின்கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடுவதை கைவிட்டு ஒவ்வொரு மாதமும் கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஆம்பூா் பகுதியில் அரசு மகளிா் கல்லூரியை ஏற்படுத்த வேண்டும். ஆம்பூா் நகரில் புதை சாக்கடை திட்டத்தால் சேதமடைந்துள்ள அனைத்துச் சாலைகளையும் ஆம்பூா் நகராட்சி விரைந்து சீரமைக்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதால், வணிகா்களின் கோரிக்கை அடிப்படையில் மாற்றம் செய்து, அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில், ஆம்பூா் வணிகா் சங்கப் பேரமைப்பின் புதிய நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது.

இதில், தலைவா் ஆம்பூா் சி.கிருஷ்ணன், செயலாளா் ஆா்.ஞானசேகரன், பொருளாளா் ஜி.வி.சுந்தர்ராஜ், துணைத் தலைவா்கள் எஸ். அறிவழகன், சீனிவாச பெருமாள், துணைச் செயலாளா்கள் எம். எத்துராஜ், கே. முஹம்மத் இப்ராஹிம், கே. ராஜசேகரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT