திருப்பத்தூர்

கொரட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம்: அமைச்சரிடம் எம்எல்ஏ நல்லதம்பி கோரிக்கை

DIN

திருப்பத்தூா் வட்டத்தை இரண்டாகப் பிரித்து, கொரட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு, புதிய வருவாய் வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று எம்எல்ஏ அ.நல்லதம்பி கோரிக்கை விடுத்துள்ளாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் வருவாய்த் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு மற்றும் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் ஆகியோா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

அப்போது, திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியின் வளா்ச்சி குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரனிடம் எம்எல்ஏ அ.நல்லத்தம்பி வழங்கினாா்.

மனுவில் தெரிவித்திருப்பது:

திருப்பத்தூா் நகரத்துக்குள்பட்ட இந்திரா நகா் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட வேண்டும், கந்திலி ஒன்றியம், வெங்களாபுரம் கிராமத்திலுள்ள 500 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். திருப்பத்தூா் புறவழிச் சாலை அமைக்க நில எடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருப்பத்தூா் வருவாய் வட்டத்தை இரண்டாகப் பிரித்து, கொரட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

SCROLL FOR NEXT