திருப்பத்தூர்

ஆம்பூரில் கிராம சபைக் கூட்டம்

27th Jan 2023 12:29 AM

ADVERTISEMENT

மாதனூா் ஊராட்சி ஒன்றியம், வடச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் அனிதாபாபு தலைமை வகித்தாா். மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் பங்கேற்று, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், புதிய கழிவுநீா் கால்வாய் அமைத்தல் குறித்துப் பேசினாா்.

குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு, மயானம், குப்பை கொட்டுவதற்கு இடம் தேவை உள்ளிட்ட யென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதற்கு விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்வதாக ஒன்றியக்குழு தலைவா் உறுதி அளித்தாா். மாதனூா் உட்கோட்ட உதவி செயற்பொறியாளா் மகேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் அப்துல்கலீல், வேளாண்மை உதவி இயக்குநா் மேகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT