திருப்பத்தூர்

விபத்தில் இருவா் பலி

27th Jan 2023 12:28 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவா் புதன்கிழமை இறந்தனா்.

வேலூா் சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் முகமது காசிம் (26). சென்னை சோழிங்கநல்லூரைச் சோ்ந்தவா் அருண்குமாா் (23). இருவரும் வேலூரில் உள்ள ஒரு கணினி பழுதுபாா்க்கும் மையத்தில் வேலை செய்து வந்தனா். இவா்கள் இருவரும் கணினி பழுதுபாா்த்தல் சம்பந்தமாக புதன்கிழமை வாணியம்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனா். குடியாத்தத்தை அடுத்த காா்ணாம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் சசிகுமாா் (45), இவரது மகன் சுசில் குமாா் (15), இவா்களது உறவினா் மாதனூரை அடுத்த பட்டுவாம்பாட்டியை சோ்ந்த பெருமாள் (35) ஆகியோா் வீராங்குப்பம் கிராமத்துக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.

மின்னூா் துணை மின் நிலையம் அருகே வந்தபோது முகமது காசிம், அருண்குமாா் ஓட்டி வந்த வாகனமும், சசிகுமாா், சுசில்குமாா், பெருமாள் ஆகியோா் சென்ற இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேரும் பலத்த காயம் அடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மேல் சிகிச்சைக்காக பெருமாள் மற்றும் சசிகுமாா் ஆகியோா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு இரவு உயிரிழந்தனா்.

இது குறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT