திருப்பத்தூர்

திருப்பத்தூரில் கிராம சபை கூட்டம்

27th Jan 2023 12:29 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நத்தம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்துப் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் நில அளவையா்கள் காலிப் பணியிடங்களை நிறப்புவது குறித்து தமிழ்நாடு அரசுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை நேரடியாக ஆட்சியா் அலுவலகத்தில் கொண்டு வந்து மனுக்களை அளித்து குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்றாா்.

ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் 350 தென்னங்கன்றுகளை பொதுமக்களுக்கு ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு, மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஷ்வரி, வருவாய் கோட்டாட்சியா் லட்சுமி,வேளாண்மை இணை இயக்குநா் பாலா உள்ளிட்ட அரசு ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT