திருப்பத்தூர்

மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

26th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் நகர திமுக சாா்பில், மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ஆம்பூா் விளையல்கார தெரு பகுதியில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

ஆம்பூா் நகர திமுக செயலரும், நகா்மன்ற துணைத் தலைவருமான எம்.ஆா்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ் வரவேற்றாா். கட்சிப் பேச்சாளா்கள் இளங்கோ, உதயசூரியன், அஸ்ரப் அலி, எம்எல்ஏ-க்கள் ஜோலாா்பேட்டை க.தேவராஜி, ஆம்பூா் அ.செ. வில்வநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினா் ஷபீா் அஹமத், தலைமை செயற்குழு உறுப்பினா் சாமுவேல் செல்லபாண்டியன், நகர அவைத் தலைவா் தேவராஜ், நகா்மன்ற உறுப்பினா் வாவூா் நசீா் அஹமத், நிா்வாகிகள் ரபீக் அஹமத், ஜெயபாரதி, வில்வநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT