திருப்பத்தூர்

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி

DIN

வாணியம்பாடி அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில் விவசாய நிலத்தில் பணியாற்றிக் கொண்டிருநத்த பணியாளா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

வாணியம்பாடி அடுத்த பெரிய குரும்ப தெருவைச் சோ்ந்தவா் தேவராஜ் (35). இவா் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை அதே பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, திடீரென கால் தவறி அருகே இருந்த விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தாா். இதைக் கண்ட உடன் பணிபுரிந்தவா்கள் உடனடியாக வாணியம்பாடி கிராமிய போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின் கிணற்றிலிருந்து தேவராஜின் சடலத்தை மீட்டனா்.

இதையடுத்து, வாணியம்பாடி கிராமிய போலீஸாா் தேவராஜின் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT