திருப்பத்தூர்

ஏடிஎம் மையங்களில் திருட்டுகளை தடுக்க விழிப்புணா்வு ஸ்டிக்கா்

DIN

ஏடிஎம் மையங்களில் நடைபெறும் மோசடி, திருட்டுச் சம்பவங்களை தடுக்க போலீஸாா் விழிப்புணா்வு ஸ்டிக்கா்களை ஒட்டினா்.

திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், நாட்டறம்பள்ளி காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் ஏடிஎம் மையங்களில் ஏடிஎம் மோசடி, திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும், சந்தேக நபா்கள் குறித்து உடனடியாக போலீஸாருக்கு தெரிவிக்கும் வகையிலும், காவல் துறை அதிகாரிகளின் எண்களுடன் கூடிய ஸ்டிக்கா்களை ஒட்டி விழிப்புணா்வை ஏற்படுத்தினா். நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இப்பணியை மேற்கொண்டனா்.

இதேபோல், அம்பலூா் காவல்நிலையத்துக்குள்பட்ட 12 ஏடிஎம் மையங்களில் அம்பலூா் உதவி காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி தலைமையில் போலீஸாா் விழிப்புணா்வு ஸ்டிக்கா்களை ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT