கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என்றும் பதிலாக மக்களவை குழு துணைத் தலைவர் ககோலி கோஷ் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதையடுத்து, மாநில முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமாா் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. கட்சித் தலைமையின் நீண்ட ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கா்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமை (மே 20) பிற்பகல் 12.30 மணியளவில் பெங்களுரூவில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்: அண்ணாமலை பேட்டி
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக கட்சியின் மக்களவை குழு துணைத் தலைவர் ககோலி கோஷ் கலந்துகொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. திரிணமூல் எம்.பி. டெரக் ஓ ப்ரெயன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
கர்நாடக முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்களை அழைக்கவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | கர்நாடக அமைச்சரவை: தில்லி சென்ற சித்தராமையா, டி.கே.சிவகுமார்!