செய்திகள்

கேன்ஸ் திரைப்பட விழா: வித்தியாசமான ஆடையில் ஐஸ்வர்யா ராய்!

19th May 2023 02:02 PM

ADVERTISEMENT

 

கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் வித்தியாசமான ஆடையில் வந்தது அனைவரையும் ஈர்த்திருக்கிறது.

பிரான்ஸின் கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் 10 நாள் நிகழ்வாக திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டு மே 16 முதல் 27 வரை நடைபெறுகிறது. 

உலகின் பல்வேறு நாட்டு நடிகர்கள், நடிகைகள் கலந்துகொள்ளும் இந்த விழா சர்வதேச அளவில் புகழ்பெற்றது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க: லியோ: விஜய்க்கு அப்பாவாக சஞ்சய் தத்?

இந்தியாவிலிருந்தும் பல சினிமா பிரபலங்கள் இவ்விழாவில் கலந்துகொள்ள சென்றுள்ளனர். இந்நிலையில், விழாவுக்குச் சென்ற நடிகை ஐஸ்வர்யா ராய் நீளமான சில்வர் பதிந்த கவுன் ஆடையை அணிந்து வந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT