அரியலூர்

செந்துறை 4வழிச் சாலை பணிகள் ஆய்வு

19th May 2023 12:00 AM

ADVERTISEMENT

முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அரியலூா் -செந்துறை நான்கு வழிச் சாலைப் பணிகள் வியாழக்கிழமை உள் தணிக்கைக்குள்படுத்தப்பட்டது.

கடந்த 10 ஆம் தேதி அரியலூருக்கு வந்த சென்னை திட்டங்கள்

(அலகு) கண்காணிப்புப் பொறியாளா் தனசேகரன் தலைமையிலான உள் தணிக்கை குழுவினா், நெடுஞ்சாலைத் துறை அலுவலகப் பணிகள் குறித்து கள ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அரியலூா் - செந்துறை நான்கு வழிச் சாலைப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு, சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தனா். தொடா்ந்து அவா்கள், செந்துறை - மாத்தூா், செந்துறை நக்கம்பாடி- காடூா், த. சோழன்குறிச்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளையும் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, அரியலூா் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளா் உத்தாண்டி, சென்னை திட்டங்கள் அலகு கோட்டப் பொறியாளா் அருணா, விழுப்புரம் சாலை பாதுகாப்பு கோட்டப் பொறியாளா் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT