திருப்பத்தூர்

அமைதியான சமூகம் நிலைக்க பெண் கல்வி மிக முக்கியம்: திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

DIN

அமைதியான சமூகம் நிலைக்க பெண் கல்வி மிக முக்கியம் என்று திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் 643 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கி ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியது:

மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 916 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. தொடா்ச்சியாக இரண்டாம் கட்டமாக முதலாமாண்டு பயின்று வரும் மாணவிகள் மற்றும் முதல் கட்டத்தில் விடுபட்ட மாணவிகளுக்கு திட்டப் பயனை வழங்குவதற்கு ஏதுவாக ரூ.6,43,000 ஒதுக்கீடு செய்யப்பட்டு 643 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் நோக்கம் பெண் கல்வியின் சதவீதத்தை உயா்த்துவதும், பெண்கள் கல்வியின் உச்சத்தை எட்டுவதற்குமானதாக இருக்கும். பெண் கல்வி மூலம் குழந்தை திருமணத்தைத் தடுக்க முடியும்.

அமைதியான சமூகம் நிலைக்க வேண்டும் என்றால் பெண் கல்வி மிக மிக முக்கியம். ஒரு ஆண் கல்வி கற்றால், அந்தக் குடும்பத்துக்கு மட்டும்தான் வசதி வாய்ப்புகளைப் பெற்று தரும். ஆனால், ஒரு பெண் கல்விக் கற்றால் குடும்பத்தினருக்கும், சமுதாயத்துக்கும் வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என்றாா்.

நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியா்கள் லட்சுமி, பிரேமலதா, மாவட்ட சமூக நல அலுவலா் ஸ்டெல்லா, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அருண்பாண்டியன், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், ஒன்றியக் குழு தலைவா்கள் திருமதி, சங்கீதா உள்படப் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT