திருப்பத்தூர்

சாராயம் விற்பனை செய்த பெண் கைது

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே சாராயம் விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மாதனூா் ஒன்றியம் ஈச்சம்பட்டு பகுதியில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது அப்பகுதியில் கள்ளச்சாராயம் செய்யப்படுவது தெரியவந்தது. அதன்பேரில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அதே பகுதியை சோ்ந்த சித்ரா (58) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 110 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT