திருப்பத்தூர்

நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரணம்

8th Feb 2023 01:07 AM

ADVERTISEMENT

வாணியம்பாடியில் இலவச சேலைக்கு டோக்கன் பெற மக்கள் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு திமுக ஒன்றியச் செயலாளா் வி.எஸ்.ஞானவேலன் தலா ரூ. 10,000 நிவாரணமாக வழங்கினாா்.

வாணியம்பாடியில் கடந்த சனிக்கிழமை (பிப். 4) தனியாா் நிறுவனத்தின் சாா்பில், நடைபெற்ற இலவச புடவைகளுக்கான டோக்கன் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மூதாட்டிகள் உயிரிழந்தனா்.

இறந்தவா்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் நிவாரணமாக அறிவித்தது. இந்த நிலையில், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் வி.எஸ்.ஞானவேலன் தனது பகுதியைச் சோ்ந்த வாணியம்பாடி மல்லிகா, அரபாண்டகுப்பம் பகுதியைச் சோ்ந்த ராஜாத்தி ஆகிய இருவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, தலா ரூ. 10,000 நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினாா். மேலும், அந்த குடும்பத்தில் உள்ள மாணவா்களது கல்விச் செலவையும் தாமே ஏற்பதாக உறுதியளித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT